/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளியில் கவின் கலை வகுப்புகள் துவக்கம்
/
பள்ளியில் கவின் கலை வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூலை 01, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கவின் கலை வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு உறவின்முறை பொதுச் செயலாளர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் தனபால் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
விழாவில் பள்ளிச் செயலாளர் பாலசரவணக்குமார், இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, நிர்வாக குழு உறுப்பினர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.