/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர் சாதனை
/
காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர் சாதனை
காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர் சாதனை
காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி தொடர் சாதனை
ADDED : மே 12, 2024 03:58 AM

சின்னமனுார்: சின்னமனூர் காயத்ரி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப் பள்ளி இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்விலும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்ப பள்ளி மாணவி ஷீரின் தாஜ் 500 க்கு 487, ரோஷினி ஜெனிபர் 486, யாழினி நாச்சியார் 483, சிவஹரினி 483 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றனர். 34 மாணவிகள் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
480 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேர், 450 க்கு மேல் 9 பேர், 400க்கு மேல் 21 மாணவிகள் மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவிகளை பள்ளி தாளாளர் விரியன் சாமி, நிர்வாக அலுவலர் மனோஜ்கண்ணன் , முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.