/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் தெய்வம் உங்களை மன்னிக்காது:நா.த.கட்சியினர் பிரசாரம்
/
பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் தெய்வம் உங்களை மன்னிக்காது:நா.த.கட்சியினர் பிரசாரம்
பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் தெய்வம் உங்களை மன்னிக்காது:நா.த.கட்சியினர் பிரசாரம்
பணம் வாங்கி ஓட்டுப்போட்டால் தெய்வம் உங்களை மன்னிக்காது:நா.த.கட்சியினர் பிரசாரம்
ADDED : மார் 29, 2024 06:05 AM
ஆண்டிபட்டி : ' பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் உங்களை எந்த தெய்வமும் மன்னிக்காது', என நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
தேனி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் சரக்கு வாகனத்தில் பிரசாரம் செய்தார். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சி கொடி பிடித்தபடி, ட்ரம் செட்டுடன் 'மைக்' சின்னத்தை அறிமுகப்படுத்தி ஓட்டு கேட்டு சென்றனர். பெரும்பாலான இடங்களில் வேட்பாளர் பேசவில்லை. உடன் வந்த கட்சி நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் சக்கம்பட்டியில் பேசியதாவது: பொதுமக்களுக்கான பிரச்னைகளை முன்வைத்து போராடவும் உழைக்கவும் மட்டுமே நாம் தமிழர் கட்சி வரவேண்டும் என்று நினைக்கின்றனர். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால் எந்த தெய்வமும் உங்களை மன்னிக்காது.
ஓட்டுக்களை விற்பனை செய்யாதீர்கள். அன்றைய தேவை பூர்த்தியாக யார் பணம் தருவார்கள் என்று எதிர்பார்க்கும் நிலை மாற வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று தி.மு.க., வேட்பாளராகவும், பா.ஜா.,வை எதிர்த்து வந்த தினகரன் இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்து வேட்பாளராகவும் பிரசாரம் செய்கின்றனர்.
ஓட்டுக்கு பணம் ஏன் தருகிறார்கள் என்றும், அந்த பணம் எங்கிருந்து வந்தது. உழைத்த காசை எவரும் வீடு வீடாக வந்து தருவார்களா என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் விடை கிடைக்கும். அள்ளி கொடுத்தவர் சும்மா போவாரா. இதையெல்லாம் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

