/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'தொண்டை வறண்டு போச்சு ஒரு டீ வாங்கி கொடுங்கப்பா' தங்க தமிழ்செல்வன் பிரசாரம்

ADDED : ஏப் 04, 2024 03:31 AM
ஆண்டிபட்டி : தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் காலை 7:35 மணிக்கு ஆண்டிபட்டி ஒன்றியம் திம்மரசநாயக்கனூரில் பிரசாரத்தை துவக்கினார்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்ததால் பேசும் இடங்களில் நிழல் கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவரிடமும் இருந்தது. மேக்கிழார்பட்டி, மறவபட்டி, போடிதாசன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி கிராமங்களில் மர நிழலில் நின்று பிரசாரத்தை தொடர்ந்தனர். வெயிலின் அருமையை மர நிழலில் அனைவரும் உணர்ந்தனர். முன்னோர்களைப்போல் அனைவரும் வீடுகள் மரம் வளர்த்து பயன் கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரசாரத்தின் ஊடே வேட்பாளர் பேசினார். பகல் 12:00 மணிக்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது.
கன்னியப்பன்பிள்ளைபட்டி பிரசாரத்தில் கூடி நின்ற மக்களிடம் தொண்டை வறண்டு போச்சு, வெயில் தாங்க முடியவில்லை. கடை இருந்தால் டீ வாங்கி கொடுங்கப்பா அதன் பின் பேசுகிறேன் என்றார். அடுத்த சில நிமிடத்தில் தொண்டர் ஒருவர் கொண்டு வந்த சூடான டீயை உறிஞ்சிவிட்டு மீண்டும் பிரசாரம் செய்தார்.