/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
/
பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்
ADDED : ஜூலை 29, 2024 12:18 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள பஸ் டெப்போக்களில் பி.பி.சி., (பஸ் பாடி கிளீனர்) பணியாளர்கள் அதிகம் இல்லாததால், பஸ்கள் போதிய அளவில் சுத்தம் செய்யப்படாமல் இயக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, தேவாரம், கம்பம் 1, 2, லோயர்கேம்ப் ஆகிய 7 இடங்களில் அரசு பஸ் டெப்போக்கள் உள்ளன. இங்கிருந்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் அடங்கும். புதிதாக 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மாவட்டத்திற்கு வந்துள்ளன. ஆனால், டெப்போக்களில் போதிய அளவில் பி.பி.சி., பணியாளர்கள் இல்லை. இதனால் புது பஸ்கள் உள்ளிட்ட ஏனைய பஸ்களை சுத்தம் செய்வதில்லை. பி.பி.சி., பணியாளர்கள் சில டொப்போக்களில் 4, 5 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 20 பஸ்கள் வரை மட்டும் சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற பஸ்கள் சுத்தம் செய்யப்படுவது இல்லை. பி.பி.சி., பணியாளர்களுக்கு சம்பளமும் குறைவாக வழங்குவதால், பணிக்கும் வருவது இல்லை. தனியார் பஸ்கள் தினமும் சுத்தம் செய்யப்பட்டு இயக்கப்படும் நிலையில், பணியாளர்கள் இல்லாததால் அரசு பஸ்கள் சுத்தம் செய்யாமல் இயக்கப்படுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் சுத்தம் செய்து இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.