/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கலந்தாய்வு இன்று துவக்கம்
ADDED : மே 29, 2024 04:32 AM
தேனி, : வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இன்று சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடக்கிறது. ஜூன் 10ல் பொது கலந்தாய்வு துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளதாவது: வீரபாண்டி கலை அறிவியல் கல்லுாரியில் படிக்க விண்ணப்பித்தவர்களில் துறைவாரியாக தமிழ் 985, ஆங்கிலம் 589, பி.சி.ஏ., 792, இளநிலை கம்யூட்டர் சயின்ஸ் 835, கணிதம் 261, பொருளாதாரவியல் 687, வணிகவியல் 811 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கையில் இன்று விளையாட்டு, மாற்றுத்திறன், முன்னாள் படைவீரர் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 10ல் இளநிலை கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., படிப்புகளுக்கும், ஜூன் 11ல் வணிகவியல், பொருளாதாரவியல் பாடபிரிவுகளுக்கும், ஜூன் 12ல் தமிழ், ஆங்கில பாடபிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் பெற்றோருடன் கல்லுாரிக்கு வர வேண்டும். போட்டோ ஒட்டிய பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், அசல் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு புத்தகம், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் பங்கேற்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு கலந்தாய்வில் பங்கேற்போர் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
சேர்க்கை கட்டணம் இளநிலை கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., ரூ.1550, மற்ற இளங்கலை, இளம் அறிவியல் பிரிவுகளுக்கு ரூ. 2150 சேர்க்கை கட்டணமாகும் என தெரிவித்துள்ளார்.