/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு இன்ஜி., கல்லுாரி மாணவர் விடுதி பாத்ரூமில் இறப்பு
/
அரசு இன்ஜி., கல்லுாரி மாணவர் விடுதி பாத்ரூமில் இறப்பு
அரசு இன்ஜி., கல்லுாரி மாணவர் விடுதி பாத்ரூமில் இறப்பு
அரசு இன்ஜி., கல்லுாரி மாணவர் விடுதி பாத்ரூமில் இறப்பு
ADDED : பிப் 15, 2025 02:18 AM

போடி,:திருநெல்வேலி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் விக்னேஷ் 21. இவர் தேனி மாவட்டம், போடி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ., மூன்றாம் ஆண்டு படித்தார்.
செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் காலை விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் திரும்ப வரவில்லை. சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலரும் நேற்று காலை உள் பக்கமாக பூட்டி இருந்த சுகாதார வளாகத்தை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது விக்னேஷ் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவரின் பெற்றோர் கூறியதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.