ADDED : செப் 13, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பொது வினியோகத்திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் நாளை பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டி ரேஷன்கடை, தேனி அம்பாசமுத்திரம் ரேஷன்கடை, ஆண்டிபட்டி கண்டமனுார் ரேஷன்கடை,
உத்தமபாளையம் அணைப்பட்டி ரேஷன் கடை, போடி உப்புக்கோட்டை ரேஷன் கடைகளில் சப்கலெக்டர், ஆர்.டி.ஓ., மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளால் காலை 10:30 மணி முதல் நடக்கிறது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், பொருட்கள் வினியோக குறைபாடு குறித்த மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.