/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு
/
கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு
கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு
கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல மறுக்கும் அரசு பஸ்களால் கூடலுார் பயணிகள் பாதிப்பு
ADDED : ஆக 06, 2024 05:41 AM
கூடலுார்: கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் அரசு பஸ்கள் செல்ல மறுப்பதால் கூடலுார் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமுளியிலிருந்து தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாலை 6:00 மணிக்கு மேல் குமுளியில் இருந்து கூடலுார், கம்பம் வழியாக செல்லும் அதிகமான அரசு பஸ்கள் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இதனால் பஸ் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இரவில் அவதி:
இரவு 8.30 மணிக்கு மேல் கம்பத்தில் இருந்து கூடலுார் வருவதற்கு கூடுதல் பஸ் வசதி இல்லை. கம்பம் பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதேபோல் குமுளியில் இருந்து கூடலுார் வழியாக தேனி, திருநெல்வேலி செல்லும் பல அரசு பஸ்கள் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வதில்லை. இது குறித்து பயணிகள் கேட்டால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடுவழியில் இறக்கி விட்டு விடுகின்றனர். கம்பம் அரசு விரைவு பேருந்தில் முன்பதிவு செய்த கூடலுார் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கூடலுார் புறக்கணிப்பு:
கூடலுாரில் புறவழிச் சாலை அமைக்கப்பட்ட பின் ஏராளமான தொலைதூர பஸ்கள் கூடலுார் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அனைத்து பஸ்களும் கம்பம் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வரவும், தொலைதூர பஸ்கள் கூடலுார் பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் புறவழிச் சாலை வழியாக செல்வதை தடுக்கவும் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.