ADDED : ஆக 17, 2024 01:00 AM
தேனி : தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் மதுரை சகோதயா சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடந்தது.
போட்டிகளை கம்மவார் சங்கம் தலைவர் பாண்டியராஜன், இணைச் செயலாளர் ராஜ்மன்னார், பள்ளிச் செயலாளர் வாசு, பொருளாளர் சுந்தரவடிவேலன், பள்ளி முதல்வர் பாலபிரேமாதேவி கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 12 வயது பிரிவில் தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றது. கம்பம் பேர் லேண்ட் பள்ளி 2ம் இடம் பெற்றது. 14 வயதுப்பிரிவில் தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி முதலிடமும், சக்திவிநாயகர் பள்ளி 2ம் இடம் பெற்றது. 17 வயது பிரிவில் சக்திவிநாயகர் பள்ளி முதலிடமும், தேனி கம்மவார் பப்ளிக் பள்ளி 2ம் இடம் பெற்றது.
19 வயது பிரிவில் கம்பம் பேர் லேண்ட் பள்ளி முதலிடமும், கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி 2ம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோஸி பப்ளிக் பள்ளி முதல்வர் பாரதரத்தினம் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

