/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமிக்கு தொந்தரவு: பால் வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை * தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : மார் 28, 2024 06:40 AM
தேனி: போடி அருகே 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த மேலசொக்கநாதபுரம் காமராஜர் தெரு பால் விற்பனையாளர் ஆனந்த முருகனுக்கு 50, ஐந்தாண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிததுள்ளது.
2021 செப்., 9ல் பால் விற்கும் போது சிறுமிக்கு ஆசை வார்த்தைக்கூறி சிறுமியிடம் பால் விற்பனையாளர் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததால், பெற்றோர் புகாரில், போடி அனைத்து மகளிர் போலீசார் 2021 செப்., 28 ல் ஆனந்தமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக விவேகானந்தன் ஆஜரானார். நேற்று விசாரணை முடிந்தது. குற்றவாளி ஆனந்தமுருகனுக்கு, நீதிபதி கணேசன் ஐந்தாண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.