/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம்
/
ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம்
ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம்
ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம்
ADDED : ஆக 26, 2024 06:54 AM
ஆண்டிபட்டி:
டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஆதி திராவிடர் காலனியில் புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு ரூ.7.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் வேல்மணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தூய்மை பாரத இயக்க திட்ட நிதி ரூ.2.10 லட்சம், 2024 -- 25ல் 15 வது நிதிக்குழு மானியம் ரூ.5 லட்சத்து 7 ஆயிரத்து 380, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி ரூ.67 ஆயிரத்து 620, மொத்தம் ரூ.7.85 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சக்கம்பட்டி ஜெ.ஜெ.நகரில் முத்துமாரியம்மன் கோயில் பின்புறம்உள்ள தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் கூடிய பேவர் ப்ளாக் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.