/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் வெப்பம் அதிகரிப்பு கலெக்டர் முன்னெச்சரிக்கை
/
இடுக்கியில் வெப்பம் அதிகரிப்பு கலெக்டர் முன்னெச்சரிக்கை
இடுக்கியில் வெப்பம் அதிகரிப்பு கலெக்டர் முன்னெச்சரிக்கை
இடுக்கியில் வெப்பம் அதிகரிப்பு கலெக்டர் முன்னெச்சரிக்கை
ADDED : மே 04, 2024 06:23 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்களுக்கு கலெக்டர் ஷீபா ஜார்ஜ் முன்னெச்சரிக்கை விடுத்தார்.
கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காலை 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை வெப்பத்தை தவிக்கும் வகையில் கட்டுமானம், விவசாய தொழிலாளர்கள், வழியோர வர்த்தகர்கள், கடின வேலைகளில் ஈடுபடுவோர் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். தொழில்முறை கல்லூரி, அங்கன்வாடி உள்பட அனைத்து கல்வி ஸ்தாபனங்களும் மே 6 வரை மூட வேண்டும். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேர்வுகளில் மாற்றம் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கால வகுப்புகள் நடத்துவதை காலை 11:00 முதல் பிற்பகல் 3:00 மணி வரை தவிர்க்க வேண்டும்.
போலீஸ், தீயணைப்புதுறை, தேசிய மாணவர் படை உள்பட பல்வேறு படையினரின் பயிற்சி மையங்களில் பகல் நேர அணி வகுப்பு, பயிற்சி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஆஸ்பெட்டாஸ், தகர ஷீட் ஆகியவற்றால் மேல் கூரை அமைக்கப்பட்ட பணியிடங்களை மூட வேண்டும். அது போன்ற மேல் கூரை கொண்ட வீடுகளில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் அனைவரையும் முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மார்க்கெட், கட்டடங்கள், குப்பை சேமிப்பு கிடங்கு உள்பட எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ள பகுதிகளில் தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் வசிக்கும் வரிசை வீடுகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆகியவற்றில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், என அறிக்கையில் கூறியுள்ளார்.