/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சித்தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஊராட்சித்தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊராட்சித்தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊராட்சித்தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 12, 2024 04:06 AM
மதுரை: தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சித் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்த கலெக்டரின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
சுருளிப்பட்டி ஊராட்சி தலைவர் நாகமணி தாக்கல் செய்த மனு:
நான் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் 2023 ஜனவரியில் உத்தரவிட்டார். இது சட்டவிரோதமானது. ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு தரப்பு: மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளக்கம் பெற்ற பின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: இவ்விஷயத்தின் தகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் 203 வது பிரிவின்படி மனுதாரருக்கு எதிராக கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்க பிரிவு 203 ன் கீழ் கலெக்டருக்கு அதிகாரம் இல்லை என ஏற்கனவே ஒரு வழக்கில் இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாயத்து சட்டப் பிரிவு 205 ன் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு மனுதாரரிடம் விளக்கம் கோரப்பட்டது. அதில் மனுதாரர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிப்பது பற்றி கலெக்டர் குறிப்பிடவில்லை. இதனால் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து மனுதாரருக்கு எதிராக கலெக்டர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.