/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேட்பாரற்ற நிலையில் பாழாகும் 'ஹைவேஸ்' வழிகாட்டி போர்டு
/
கேட்பாரற்ற நிலையில் பாழாகும் 'ஹைவேஸ்' வழிகாட்டி போர்டு
கேட்பாரற்ற நிலையில் பாழாகும் 'ஹைவேஸ்' வழிகாட்டி போர்டு
கேட்பாரற்ற நிலையில் பாழாகும் 'ஹைவேஸ்' வழிகாட்டி போர்டு
ADDED : பிப் 24, 2025 04:42 AM

பெரியகுளம் : பெரியகுளத்தில் இருந்து கும்பக்கரை, அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் ரோட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வழிகாட்டி போர்டு தோட்டத்தில் கேட்பாரற்ற நிலையில் வெயில், மழையால் பாழாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கும்பக்கரை பிரிவிலிருந்து, கும்பக்கரை அருவிக்கு 7 கி.மீ., அங்கிருந்து கொடைக்கானல் ரோடு அடுக்கத்திற்கு 18 கி.மீ., துாரமும், பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு 25 கி.மீ., தூரம் உள்ளது. பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு 51 கி.மீ., சிறிய அளவிலான ரோடு. இதற்கு மாறாக பெரியகுளத்தில் இருந்து காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்வதற்கு 75 கி.மீ., துாரம். 24 கி.மீ., துாரம் குறைவு உள்ளது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் காட்ரோடு வழியாக செல்வர். பெரியகுளம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே, பெரியகுளம் தேவதானப்பட்டி ரோடு, கும்பக்கரை பிரிவில் 500 கிலோ எடையுள்ள ரூ.3 லட்சம் மதிப்பிலான போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதனால் தமிழகம் மட்டுமல்ல கேரளா சுற்றுலா பயணிகள் பயனடைந்தனர். இந்தப் பகுதியில் ரோட்டோரம் அகலப்படுத்தும் பணியின் போது போர்டு கழற்றப்பட்டு அருகேயுள்ள தென்னந்தோப்பில் கழற்றி வைக்கப்பட்டது.
ரோடு சீரமைப்பு பணி முடிந்து பல மாதங்களாகிய நிலையில் போர்டு, மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படாமல் உள்ளது.
மேலும் தோட்டத்தில் மழை, வெயில் என சேதமடைவது தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். 'போர்டு' எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் நிலை உள்ளது.--

