/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மரம் சாய்ந்ததால் அங்கன்வாடிக்கு விடுமுறை
/
மரம் சாய்ந்ததால் அங்கன்வாடிக்கு விடுமுறை
ADDED : ஜூன் 04, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் பழைய பஸ்ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் 8 வது வார்டு நகராட்சி சித்தா பிரிவு கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 10 சிறுவர்கள் படித்துவருகின்றனர்.
நேற்று முன்தினம் பெரியகுளம் பகுதியில் பெய்த மழையால் அங்கன்வாடி மையம் வளாகத்தில் வேலமரம், சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் மீது விழுந்தது.
அங்கு பணிபுரியும் ஆசிரியைகள் மரத்தை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் பாதுகாப்பு கருதி நேற்று அங்கன்வாடி மையம் விடுமுறை அளிக்கப்பட்டது.