/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 6270 பேர் வீடுகளில் ஆய்வு
/
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 6270 பேர் வீடுகளில் ஆய்வு
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 6270 பேர் வீடுகளில் ஆய்வு
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 6270 பேர் வீடுகளில் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2024 05:57 AM
தேனி : மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்துள்ள 6270 பேரின் வீடுகளுக்கு மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், கடந்தாண்டு ஆக., முதல் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் புதிய ரேஷன்கார்டு வழங்க கோரி தமிழகம் முழுவதும் பலர் விண்ணப்பித்து காத்திருந்தனர். இந்நிலையில் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் நேரடி ஆய்வு செய்ய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தாலுகா வாரியாக ஆண்டிபட்டி 1070, போடி 692, பெரியகுளம் 1049, தேனி 759, உத்தமபாளையம் 2700 என மொத்தம் 6270 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களை வீட்டிற்கே சென்று ஆய்வுகள் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விற்கு பின் ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கும் பணி துவங்க உள்ளது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.