/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஹோமியோபதி ‛சிந்தசிஸ் கருத்தரங்கு
/
தேனியில் ஹோமியோபதி ‛சிந்தசிஸ் கருத்தரங்கு
ADDED : அக் 09, 2024 06:05 AM

தேனி : தேனியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை, தேனி மாவட்ட ஹோமியோபதி மெடிக்கல் அசோசியேசன் சார்பில், சிந்தசிஸ் தேனி - 2024' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை ஏற்று குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், முன்னாள் ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் ஹனிமன், இந்திய மருத்துவ கவுன்சில் மாநிலச் செயலாளர் தியாகராஜன் டாக்டர்கள் அறவாழி, சுகதன், எபிமோசஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர்கள் ஸ்ரீநீவாசன், ஜெரால்டு, ஆனந்தி ஆகியோர் பேசினர்.
டாக்டர்களுக்கான புதிய மருத்துவப் பணியிடங்கள் வேண்டியும், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவப் பணியிடங்களை நியமிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றினர். தமிழகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட ஹோமியோபதி டாக்டர்களும், பயிற்சி மாணவர்களும் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஹோமியோபதி மெடிக்கல் அசோசியேசன் தலைவர் டாக்டர் சரவணன், செயலாளர் டாக்டர் நாராயணன், இணைச் செயலாளர் டாக்டர் தியாகராஜன், பொருளாளர் டாக்டர் விஜயராஜன், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.