ADDED : செப் 05, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, தேனி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேசன், பி.டி.ஓ., சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட அரங்கிற்கு தேனி ஒன்றியத்தின் முதல் தலைவர் ரத்தினம் பெயர் சூட்ட வேண்டும், பொது நிதியில் இருந்து ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கவுன்சிலர் பிரகாஷ் கோரிக்கை விடுத்தார்.
கோட்டூர் பகுதியில் தெருநாய்களை பிடிக்க வேண்டும், உப்பார்பட்டியில் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.