/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தோட்டக்கலைத்துறை முயற்சி: இஞ்சி சாகுபடியில் மகசூல் அதிகம்
/
தோட்டக்கலைத்துறை முயற்சி: இஞ்சி சாகுபடியில் மகசூல் அதிகம்
தோட்டக்கலைத்துறை முயற்சி: இஞ்சி சாகுபடியில் மகசூல் அதிகம்
தோட்டக்கலைத்துறை முயற்சி: இஞ்சி சாகுபடியில் மகசூல் அதிகம்
ADDED : மே 29, 2024 04:27 AM
கம்பம் : இஞ்சி சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறையினர் மேற்கொண்ட முயற்சயால் சாகுபடி செய்தவருக்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
சமையலில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கும். இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. கொரானா காலங்களில் இஞ்சியின் பயன்பாடு அதிகம் இருந்தது. இஞ்சி விலை எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் இஞ்சி சாகுபடி இல்லை. இதற்கான காரணம் குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில் , இஞ்சி கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டரில் நாம் உள்ளோம். ஆயிரம் மீட்டர் இருந்தால் இஞ்சிக்கு ஏற்றது.
அதிக தண்ணீர் தேவைப்படும். அதே சமயம் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது . தண்ணீர் நின்றாலும் வழிந்து செல்ல வேண்டும். சாகுபடி செய்ய எக்டேருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகும். மகசூல் கிடைக்க 10 மாதங்கள் ஆகும்.
இக் காரணங்களால் தேனி மாவட்ட விவசாயிகள் இஞ்சியை சாகுபடி செய்ய விரும்பவில்லை என்றனர்.இருந்த போதும் கடந்தாண்டு சோதனை ஓட்டமாக கம்பம் வட்டாரத்தில் சில விவசாயிகளை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை முயற்சி மேற்கொண்டனர். அதில் பலருக்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக கம்பம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், கம்பம் பகுதியில் இஞ்சி சாகுபடிக்கு ஏற்ற சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
இஞ்சி சோதனை முறையில் சாகுபடி செய்த விவசாயி நல்ல மகசூல் எடுத்துள்ளார். இந்தாண்டு கூடுதல் விவசாயிகளை இஞ்சி சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.