/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வது எப்படி தயாராகிறது 'சாட்டிலைட்' வரைபடம்
/
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வது எப்படி தயாராகிறது 'சாட்டிலைட்' வரைபடம்
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வது எப்படி தயாராகிறது 'சாட்டிலைட்' வரைபடம்
ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வது எப்படி தயாராகிறது 'சாட்டிலைட்' வரைபடம்
ADDED : மார் 22, 2024 05:31 AM
போடி: தேர்தல் அன்று பார்வையாளர்கள், கண்காணிப்பு குழுவினர், பாதுகாப்பு படையினர், மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்டோர் ஒவ்வொரு ஊருக்கும் ஓட்டுப் பதிவு மையங்களுக்கு குழப்பம் இன்றி சென்று வர 'சாட்டிலைட்' வரை படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலையொட்டி ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாகவும், மாவட்ட அளவிலும், ஓட்டு சாவடிகளின் வரைபடங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர் பட்டியலில் முன்பகுதியிலும், ஓட்டுச் சாவடியின் வரைபடங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. சட்டசபை தொகுதிகளை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்தில் அமைந்துள்ள ஊர்கள், ஊர்களில் உள்ள கிராமங்கள் வாரியாக வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
இந்த வரை படத்தின் மூலம் ஒரு ஊருக்குள் நுழைவதில் இருந்து முதலில் செல்ல வேண்டிய ஓட்டு சாவடி, அமைந்துள்ள இடம், போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் அலுவலகம், தீயணைப்பு நிலையம், பெட்ரோல் பங்க், உணவகங்கள், கண்காணிப்பு குழுக்களின் முகாம்கள் உள்ளிட்ட அமைவிடங்களுக்கான அனைத்து விபரங்களையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர போக்குவரத்து வழித்தடங்கள், ஒவ்வொரு ஊருக்கான இணைப்பு ரோடுகளின் தூரம் உள்ளிட்ட விபரங்களும் இதில் இடம் பெறுகின்றன.
முந்தைய தேர்தலில் இந்த வரைபடங்கள் தயாரிக்கும் பணியினை சர்வே துறையினர் செய்து வந்தனர். தற்போது சர்வே துறையின் உதவியுடன் தேர்தல் கமிஷன் மூலம் நியமிக்கப்பட்ட புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.

