ADDED : ஆக 29, 2024 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தின் முன், குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன், இணைச் செயலாளர் லோகநாதன், துணைச் செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ஆறுமுகம், மூத்த வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியம், கணேசன், தி.மு.க., தேனி நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், நகர அவைத் தலைவர் துரைராஜ், தேனி ஓட்டல் சங்க மாவட்டச் செயலாளர் பொன்முருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகி முருகன், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.