ADDED : ஆக 24, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் சிவசக்திவேல் 45, இவரது மனைவி ராதிகா 37, இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரு பிள்ளைகள் உள்ளனர்.
சிவசக்திவேல் ஜாதகம் பார்க்கும் தொழிலுடன் அவ்வப்போது கூலி வேலையும் பார்த்து வந்துள்ளார். அடிக்கடி கோயிலுக்கு செல்வதாக வெளியூர் சென்று விடுவார். குடும்பத்திற்கு நேரம் சரியில்லை என்பதால் கோயிலுக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு, 6 மாதங்கள் கடந்து கூட மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார். கடந்த 11.10.2019ல் வீட்டை விட்டு சென்றவர் இதுவரை மீண்டும் வரவில்லை. தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

