/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி கொலையில் கணவர் மாமனார், மாமியாருக்கு ஆயுள்
/
மனைவி கொலையில் கணவர் மாமனார், மாமியாருக்கு ஆயுள்
ADDED : மே 01, 2024 01:49 AM

தேனி,:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மனைவி சங்கீதாவின் 24, நடத்தையில் சந்தேகப்பட்டு உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்து கொன்ற வழக்கில் கணவர் மலைச்சாமி 34, மாமனார் ராமன் 64, மாமியார் செல்வம் 56, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி இந்திராகாலனி மலைச்சாமி. இவரது மனைவி சங்கீதா. இவரது நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தொடர்ந்து சண்டையிட்டு வந்தார். 2018 டிச.,4ல் சங்கீதா உடலில் மண்ணெண்யை ஊற்றி மலைச்சாமி, ராமன், செல்வம் ஆகியோர் தீ வைத்து எரித்து கொலை செய்தனர்.
ஜெயமங்கலம் போலீசார் மூவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி (பொறுப்பு)கோபிநாதன் வழக்கில் மலைச்சாமி, ராமன், செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும் விதித்தார்.