/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைடல் பிளாசம் பூங்கா ஓணம் பண்டிகைக்கு தயார்
/
ஹைடல் பிளாசம் பூங்கா ஓணம் பண்டிகைக்கு தயார்
ADDED : செப் 01, 2024 01:50 AM

மூணாறு: கேரள மாநிலம் பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணையையொட்டி மின்வாரியம் சார்பிலான ஹைடல் பிளாசம் பூங்கா உள்ளது.
இங்கு 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் பல வகை வண்ண மலர்கள், அணையின் நீர் தேக்கத்தையொட்டி நடை பாதை, சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
பூங்காவுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், இரும்பினால் வடிவமைக்கப்பட்டவற்றில் தேங்காய் நாரால் உருவாக்கப்பட்ட 680 பூந்தொட்டிகள் கடந்த மே மாதம் அமைக்கப்பட்டன.
கேரளாவில் ஓணம் பண்டிகை செப்., 15ல் கொண்டாடப்படுகிறது. ஓணம் நெருங்கும் நிலையில் சுற்றுலா பயணியரை வரவேற்கும் வகையில் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகளில் 18 வகை 'பால்ஷம்' பூக்கள் பல வண்ணங்களில் பூத்து வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.
பூங்காவை காலை 8:30 முதல் இரவு 7:30 வரை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு 80 ரூபாய், சிறுவர்களுக்கு 50 ரூபாய்.