/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஹைடல் பூங்கா
/
சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஹைடல் பூங்கா
ADDED : மே 23, 2024 03:44 AM

மூணாறு: கோடை சுற்றுலா சீசன் முடிவுக்கு வர உள்ள நிலையில் புது பொலிவு பெற்ற ஹைடல் பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணையையொட்டி மின்வாரியம் சார்பிலான ஹைடல் பூங்கா உள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் பல வகை வண்ண மலர்கள், அணையின் நீர் தேக்கத்தையொட்டி நடை பாதை, சிறுவர்களுக்கு என பொழுது போக்கு அம்சங்கள் உள்பட சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
தவிர பூங்காவுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இரும்பினால் வடிவமைக்கப்பட்டவற்றில் தேங்காய் நாரால் உருவாக்கப்பட்ட பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது பூங்கா முழுவதும் 680 பூந்தொட்டிகளில் பல்வேறு வகை பூக்கள் வைக்கப்பட்டு பூங்கா புதுபொலிவுடன் காணப்படுகிறது.
தற்போது கோடை சுற்றுலா சீசன் முடிவுக்கு வர உள்ள நிலையில் புது பொலிவு பெற்ற பூங்கா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

