/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நான் பக்கத்து ஊர்க்காரன் ... கூப்பிட்டா 10 நிமிஷத்துல வருவேன் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்

ADDED : ஏப் 07, 2024 05:23 AM
கூடலுார் : நான் பக்கத்து ஊர்க்காரன், கூப்பிட்டா 10 நிமிஷத்துல வந்து நிற்பேன் என கூடலுார் பிரசாரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். அவர் பேசுகையில் ,''கூடலுார் ஒட்டான்குளத்திற்கு நீர்வரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் 18ம் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மடையைக் கட்டி தண்ணீரைக் கொண்டு வந்தேன். பெருமாள் கோயில் கரடு வரை தார் சாலை அமைத்தேன்.
குமுளியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான முழு முயற்சியும் எடுத்தேன். நான் பக்கத்து ஊர்க்காரன், கூப்பிட்டா 10 நிமிஷத்துல வந்து நிற்பேன். இது பிரதமருக்கான தேர்தல் அல்ல, எம்.பி.,க்களுக்கான தேர்தல். சிலிண்டர் விலை 10 முறை விலை ஏற்றப்பட்டுள்ளது. உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு நானே வாங்கித் தருவேன். நான் உள்ளூர்க்காரன், வெளியூரிலிருந்து ஆள் கூட்டி வரும் தினகரன் ஜெயிக்க மாட்டார்,'' என பேசினார்.