/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால் தேனியில் தங்கி குறைகளை தீர்ப்பேன் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
/
தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால் தேனியில் தங்கி குறைகளை தீர்ப்பேன் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால் தேனியில் தங்கி குறைகளை தீர்ப்பேன் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால் தேனியில் தங்கி குறைகளை தீர்ப்பேன் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
ADDED : மார் 25, 2024 05:36 AM

தேனி : தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், மாதம் 2 முறை தேனி தொகுதியில் தங்கி மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன்,' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
தேனியில் தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை ஆதரித்து அவர் பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தேனியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
அதனை ஈடுகட்ட அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தேனி தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்து செல்லும் பிரதமர் மோடி என்ன செய்தார். வருவார் தமிழ் தமிழ்னு பேசுவாரு. திருக்குறள் பேசுவார் அது பாதி புரியாது. இந்த பிரசாரத்தின் நோக்கமே 'மாநில உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்' என்பதுதான். மொழி உரிமையை பறித்துவிட்டார்கள். தேசிய கல்வி கொள்கையில் 5ம் வகுப்பிற்கு பொது தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சி.ஏ.ஜி., அறிக்கையில் மத்திய அரசு 9 ஆண்டுகளில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு செலவு காண்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பணம் எங்கு போனது என யாருக்கும் தெரியல. ஒரு கி.மீ., ரோடு அமைப்பதற்கு ரூ.250 கோடி செலவு காண்பித்துள்ளனர். 'ஆயுஸ்மான் பாரத்' மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு ஒரே அலைபேசி எண்ணில் இருந்து காப்பீட்டு பணம் பரிமாறப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பஸ் சேவை மூலம் 456 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். பெண்கள் ஒவ்வொருவரும் மாதம் ரூ.900 இத் திட்டம் மூலம் சேமிக்கின்றனர்.தேனி தொகுதியில் தங்கதமிழ்செல்வனை 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், நான் மாதம் 2 முறை தேனியில் தங்கி மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றார். பெரியகுளம் அரசு பஸ் டிப்போ அருகே பிரசாரம் செய்தார்.

