/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் மிச்சமாகும் ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரம்

ADDED : ஏப் 03, 2024 07:12 AM
ஆண்டிபட்டி : தி.மு.க., வுக்கு ஓட்டளித்தால் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து ஆண்டில் ரூ.3 லட்சம் மிச்சமாகும் என ஆண்டிபட்டி தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரம் செய்தார்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் துவங்கி ஆண்டிபட்டி நகர், ஒன்றியத்திற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
இண்டியா கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும். ரூ.400 ஆக இருந்த காஸ் விலையை கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு ரூ.1200 ஆக உயர்த்தினர்.
இந்தியா கூட்டணி ஆட்சியை அமைந்தபின் காஸ் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். இதனால் மாதம் ரூ.700 மிச்சமாகும். பெட்ரோல் லிட்டர் ரூ.70க்கு கிடைக்கும். இதன்மூலம் தினமும் ஒரு குடும்பத்திற்கு ரூ.35 மிச்சமாகும்.
இலவச பஸ் பயணம், மாணவர்களுக்கு காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000, இவைகளால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.5000 மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் எனில் 5 ஆண்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.3 லட்சம் மிச்சமாகும்.
இந்தியா கூட்டணி ஜெயித்தால் இந்த 3 லட்சம் உறுதி. உங்கள் ஓட்டை வீணாக்காமல் தி.மு.க.,கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு பேசினார்.