ADDED : ஏப் 06, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு மற்றும் நீதிமன்றம் தலைமை பணியாளர் ராமதாஸ்பணி நிறைவு விழா நீதிமன்றம் வளாகத்தில் நடந்தது.
கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி கணேசன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர்முத்தமிழரசன் வரவேற்றனர்.
மூத்த வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி,ஞானகுருசாமி, மருதை, வழக்கறிஞர்கள் அம்பாசங்கர், முத்துராமலிங்கம், பாலமுருகன், சிவசுப்பிரமணியன், குமரன்,முகமது நூர்தீன், ஆரீப்ரகுமான், யாஸ்மின் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

