/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஹைவேவிசில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் ஏரியா வாரியாக விற்பனை தாராளம்
/
ஹைவேவிசில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் ஏரியா வாரியாக விற்பனை தாராளம்
ஹைவேவிசில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் ஏரியா வாரியாக விற்பனை தாராளம்
ஹைவேவிசில் சட்டவிரோத மது விற்பனை அமோகம் ஏரியா வாரியாக விற்பனை தாராளம்
ADDED : மே 03, 2024 05:57 AM
கம்பம்: ஹைவேவிஸ் மலைப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின்னமனுாரில் இருந்து 46 கி.மீ. தூரத்தில் உள்ளது மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு பகுதிகள். முழுக்க முழுக்க தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்ட பகுதிகளாகும். தோட்ட தொழிலாளர்களும், தனியார் எஸ்டேட்டுகளில் பணியாற்றுபவர்களும் வசிக்கின்றனர். இவர்களை தவிர தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன் வரை செயல்பட்டு வந்தது. அந்த கடையை திடீரென காலி செய்தனர். அதற்கு பின் அங்கு கடை இல்லை. இதை பயன்படுத்திய கும்பல் சின்னமனுார், ஓடைப்பட்டி பகுதியில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சென்று, மேகமலை பகுதியில் சில்லறை வியாபாரம் செய்கின்றனர்.
இந்த மதுபாட்டில்களுக்கு பல மடங்கு விலையையும் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். சுற்றுலா பயணிகளும், இங்குள்ள மக்களும் வேறு வழியின்றி கூடுதல் பணம் கொடுத்து வாங்குகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கு ஒருவர் அதாவது ஹைவேவிஸ், மணலாறு , அப்பர் மணலாறு , வெண்ணியாறு, இரவங்கலாறு , மகாராசா மெட்டு என தனித் தனியாக விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மது விற்பனை மட்டுமின்றி மற்ற போதைப் பொருள்களின் விற்பனையும் நடக்கிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கொடிகட்டி பறக்கும் விற்பனையை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடவடிக்கை எடுக்க எஸ்.பி. சிவபிரசாத் முன்வர வேண்டும்.