/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.சுப்புலாபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
டி.சுப்புலாபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
டி.சுப்புலாபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
டி.சுப்புலாபுரத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 27, 2024 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.சுப்புலாபுரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
இப்பகுதிக்கு ஆண்டிபட்டி - சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. இந்நிலையில் 250 கிராமங்களுக்கான புதிய குடிநீர் திட்டம் மூலம் கடந்த சில நாட்களாக விநியோகம் உள்ளது.
சாமியார் மடத்தில் இருந்து டி.சுப்புலாபுரம் செல்லும் ரோட்டில் கதர் அலுவலகம் எதிரில் குழாய் உடைந்ததால் குடிநீர் வீணாகிறது.
கடந்த இரு வாரங்களாகியும் சரி செய்யப்படாததால் குடிநீர் வீணாவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சேதமடைந்த குழாயை சரி செய்ய குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.