/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை வர்த்தகர்கள் அதிருப்தி
/
கேரளாவில் பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை வர்த்தகர்கள் அதிருப்தி
கேரளாவில் பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை வர்த்தகர்கள் அதிருப்தி
கேரளாவில் பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை வர்த்தகர்கள் அதிருப்தி
ADDED : செப் 13, 2024 06:05 AM
மூணாறு: கேரளாவில் பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை நடத்தும் அரசின் செயலால் வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அப்போது கடைகள், ஓட்டல் என அனைத்து வர்த்தக நிறுவங்களிலும் உணவு பொருட்களின் விலை, தரம், எடை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அதற்கு முதல்வரின் உத்தரவுபடி கலெக்டர் தலைமையில் பொது வினியோகம், எடைஅளவு, உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை உட்படுத்தி தனிப்படை அமைக்கப்படும். அவர்கள் மாவட்டம் முழுவதும் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு நடத்தி அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
தவிர தமிழகம் உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தற்போது செப்.15ல் ஓணம் கொண்டாடப்படும் நிலையில் பரிசோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
காய்கறி உள்பட உணவு பொருட்களை ஆண்டு முழுவதும் மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அவற்றின் தரம் உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட பண்டிகை நேரத்தில் மட்டும் கடைகளில் பரிசோதனை நடத்தும் அரசின் செயலால் வர்த்தகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பரிசோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டு நிதி திரட்டுவது அரசின் நோக்கம் எனவும், அதானல் பெரும்பாலும் அதிகாரிகள் பயனடைவதாக கருதப்படுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் அவ்வப்போது பரிசோதனை நடத்தினால் தரமான பொருட்கள், முறைகேடுகள் இன்றி கிடைக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.