/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் சவுக்கு சங்கர் டிரைவர், உதவியாளர் கைது சங்கர் மீது வழக்கு பாய்ந்தது

ADDED : மே 05, 2024 12:27 AM

தேனி:தேனியில் யு டியூபர் சவுக்கு சங்கர் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தேனி போலீசாரால் அவர்களின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவரது டிரைவர் ராம்பிரபு 24, உதவியாளர் ராஜரத்தினம் 42, கைது செய்யப்பட்டனர். சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அருகே பூதிப்புரம் ரோட்டில் உள்ள தங்கும் விடுதில் இருந்து யு டியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிகாலை கைது செய்து அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து அவரது காரை தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இருந்த அரைகிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சவுக்கு சங்கருடன் தங்கி இருந்த சென்னை நுங்கம்பாக்கம் ராம்பிரபு, பரமக்குடி ராஜ ரத்தினத்தை பழனிசெட்டிபட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டி.எஸ்.பி., பார்த்திபன் விசாரித்தனர்.
காரில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நடமாடும் தடய அறிவியல் ஆய்வு வாகனம் மூலம் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சவுக்கு சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
டிரைவர், உதவியாளரை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த பின் இருவரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில் 'சவுக்கு சங்கர் அவரது உடன் இருந்தவர்கள் நேற்று முன் தினம் விஷேசத்திற்காக துாத்துக்குடி சென்று மதுரை வழியாக இரவு தேனி வந்தனர்.
தேனியில் இருந்து கொடைக்கானல் அல்லது மூணாறு செல்ல முடிவு செய்திருந்த நிலையில் வழக்கில் சங்கரை கோவை போலீசாரும், மற்ற இருவரை தேனி போலீசாரும் கைது செய்துள்ளனர் என்றனர்.