/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அனைத்து பிள்ளைமார் நல அறக்கட்டளை துவக்கம்
/
அனைத்து பிள்ளைமார் நல அறக்கட்டளை துவக்கம்
ADDED : ஜூன் 09, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம், : மாவட்டத்தில் பிள்ளைமார் சமுதாய இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திருமண தகவல் மையம், நலிந்தோர்களுக்கு உதவி, இயலாதவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய தேனி மாவட்ட அனைத்து பிள்ளைமார் அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை மாவட்ட தலைவராக கம்பம் நாகமணியம்மாள் பள்ளி தாளாளர் காந்த வாசன், செயலாளராக ரவி , பொருளாளராக சன்னாசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தலைவர் காந்த வாசன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் உள்ள சங்கங்களை ஒருங்கிணைத்து அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு உதவிகள் செய்யப்படும் என்றார்.