/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கோயிலில் பாலுாட்டும் அறை திறப்பு
/
வீரபாண்டி கோயிலில் பாலுாட்டும் அறை திறப்பு
ADDED : ஆக 08, 2024 05:29 AM
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் சார்பில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை திறக்கப்பட்டது.
சங்க தலைவர் டாக்டர் கல்பனாதேவி தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் நிறைமதி, பொருளாளர் பிரிதாகொசி, நிர்வாகி சவுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், துணை ஆளுநர் ஜெயவரீன், மாவட்ட செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், சண்முகவேல், ஜெயமணி, மனோகரன், மகேந்திரன், கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர். பாலுாட்டும் அறை திட்ட தலைவர் ஸ்ரீவித்யா, ரோட்டரி கிளப் ஆப் தேனி உறுப்பினர் பாலாஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.