/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் என்.பார்வதி சில்க்ஸ் ஷோரூம் திறப்பு விழா
/
தேனியில் என்.பார்வதி சில்க்ஸ் ஷோரூம் திறப்பு விழா
ADDED : செப் 06, 2024 05:44 AM

தேனி: தேனியில் திண்டுக்கல் என்.பார்வதி குழும நிறுவனங்களின் புதிய ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி, விற்பனையை துவக்கினர்.
திறப்பு விழாவில் எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குனர் பிரபாகரன், கே.எம்.சி., குழும இயக்குனர் முத்துக்கோவிந்தன், இன்ஜினியர் ராதாகிருஷ்ணன், பாலசங்கா குழும இயக்குனர் செந்தில், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச் செயலாளர் ராஜமோகன், தேசிய செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகநாத்மிஸ்ரா, வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார் அதன் நிர்வாகிகள், எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார், அரிமா சங்க நிர்வாகிகள் கண்ணன், செல்வகணேசன், சரவணராஜா, பிரபு, டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன்,முக்கிய பிரமுகர்கள் பழனிதாஸ், மீனாட்சிசுந்தரம், தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் ராஜன், பிரகாஷ் ப்ளூ மெட்டல் இயக்குனர் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
என்.பார்வதி குழும நிர்வாகத்தினர் கூறுகையில், 'இங்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியும், கீழ் தளத்தில் தளத்தில் மேட்சிங் பிளவுஸ், ஹோம் பர்னிஷிங், தரைத்தளத்தில் பட்டு சேலைகள், பேன்சி விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் ஆண்களுக்கும், இரண்டாம் தளத்தில் பெண்களுக்கும், மூன்றாம் தளத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரங்குகளும் ஒருங்கிணைந்த ஏ.சி., வசதி செய்யப்பட்டுள்ளது, என்றனர்.