/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 29, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலில் ஆண்டிபட்டியில் தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது.
ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பு அருகே நடந்த விழாவில் எம்.எல்.ஏ., மகாராஜன் நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், பேரூராட்சி தலைவர் சந்திரகலா, பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, தி.மு.க.,நிர்வாகிகள் சேட்டு பரமேஸ்வரன், சேகர், சிவா, அய்யணன், பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர்மோர் அருந்தி தாகம் தணித்துச்சென்றனர்.

