ADDED : மே 02, 2024 06:04 AM

ஆண்டிபட்டி: கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்பத்தில் இருந்து உடலை தற்காத்துக் கொள்ளும் விதமாக, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பில் ஏத்தக்கோயில் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி தமயந்தி, செயலாளர் மாத்யூ ஜோயல் முன்னிலை வகித்தனர். முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். அரசு சிறப்பு மருத்துவர் அன்புகுமார் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார். சமமாக வைத்துக் கொள்ள நீர் மோர், இளநீர் உள்ளிட்ட பானங்கள் அடிக்கடி அருந்தவும் ஆலோசனை வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் சுரேஷ் பாண்டி, ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் உட்பட பொது மக்கள் பலரும் பயன் பெற்றனர்.

