ADDED : செப் 07, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சி முத்தனம்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.
புதிய கட்டிடத்தை ஆண்டிபட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் வரதராஜன், பி.டி.ஓ.,க்கள் சந்திரபோஸ், சரவணன், ஊராட்சி ஒன்றிய இன்ஜினியர் முத்துக்கனி, கோவில்பட்டி ஊராட்சி தலைவர் தங்கபாண்டி, ஒப்பந்ததாரர் மதியரசன், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கவிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.