/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை கோயில் பெரியகும்பிடு விழா துவக்கம்

ADDED : மே 19, 2024 11:50 PM
போடி : போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் சக்தி அழகு நிறுத்துதல் எனப்படும் பெரிய கும்பிடு விழா இன்று முதல் நான்கு நாட்கள் நடக்கிறது.
இந்நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாய் ஸ்தலம் மது ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் சக்தி அலகு நிறுத்துதல் எனப்படும் பெரிய கும்பிடு விழா நடக்க உள்ளது.
இன்று மே 20ல் துவங்கும் விழா 23 வரை நடக்கிறது. நாளை பெரிய ஆற்றில் இருந்து புனித நீரும், சவுடாம்பிகை அம்மனை குதிரை வாகனத்தில் வைத்து மேள, தாளத்துடன் அழைத்து வருதல், பக்தர்களின் உடலில் கத்தி போடுதல் நிகழ்வும் நடக்க உள்ளது.
அதன் பின் தேவாங்கர் குல ஜெகத்குரு தயானந்தபுரி மகா சுவாமிகள் முன்னிலையில் இரவு 10:00 மணிக்கு பச்சை மண் கலயத்தின் நுனிப் பகுதியில் 'சக்தி அழகு நிறுத்துதல்' நிகழ்வு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.