/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் திறப்பு விழா
/
ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் திறப்பு விழா
ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் திறப்பு விழா
ஸ்ரீ கிருஷ்ணா டெக்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் திறப்பு விழா
ADDED : ஏப் 24, 2024 06:10 AM

தேனி : தேனி கண்டமனுார் ஸ்ரீகிருஷ்ணா டெக்ஸ் நிறுவனத்தின் 3வது புதிய கிளை திறப்பு விழா தேனி கம்பம் ரோட்டில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் நிறுவனத்தை திறந்து வைத்தார். செயலாளர் திருவரங்கப் பெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
தேனி பிளைவுட்ஸ் விஜய்பாபு, வைகை பால் தாமோதரன், ரெங்கா டிராவல்ஸ் ரவிச்சந்திரன், தொழிலதிபர் குபேந்திரன், விஷூவல் பிரிண்டெக் பிரபு, சஹானா கபே சிவகுமார், கிரி எல்.இ.டி., சைன்போர்டு நிமலன், அகம் மனித வள மேம்பாட்டு நிறுவனர் சதீஸ் சுந்தரம், வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் விழாவில் பங்கேற்றனர். உரிமையாளர்கள் கோவிந்தராஜ், சுதா, அசோக்கவுதம் சுதாராணி, அகிலேஷ் கவுரவ் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'ரூ. ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசும், ரூ.2 ஆயிரத்திற்கு மேல் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் குலுக்கல் முறையில் சிறப்பு பரிசும் வழங்கப்படும்.
தினமும் ஒருவருக்கு எல்.இ.டி., 3 பேருக்கு ஏர்கூலர், 10 பேருக்கு நான் ஸ்டிக் பாட் வழங்கப்படும்.', என்றனர்.

