/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செயற்கை நிறமி பயன்பாடு ஜூஸ் கடைகளில் அதிகரிப்பு உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு தேவை

ADDED : ஏப் 29, 2024 05:52 AM
தேனி: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழ ஜீஸ் கடைகளில் குளிர்பான தயாரிப்பில் செயற்கை நிறமி சேர்ப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் துவங்கி உள்ளது.
இதனால் கோடை வாசஸ்தலங்கள், சுற்றுலாத்தலங்களைத் தேடி செல்வோரின் எண்ணிக்கை கூடிவருகிறது. தேனி மாவட்டத்தின் வழியே மூணாறு, தேக்கடி உள்ளிட்ட கேரள மாநிலத்தில் உள்ள குளுமையான சுற்றுலாத்தளங்களுக்கு செல்கின்றனர். கோடை சீசனை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக பழக்கடைகள், ஜூஸ் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஜூஸ் கடைகளில் கண்ணை கவரும் வண்ணங்கள் கொண்டு வருவதற்காக பழசாறு ஜூஸ்கள் தயாரிப்பில் செயற்கை நிறமிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இதனை பருகும் பொதுமக்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளும் உருவாக்கும். எனவே,உணவுப்பாதுகாப்புத்துறையினர் பழம், ஜூஸ்கடைகளில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.