/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோர கடைகளில் எடை அளவிற்கு கற்களின் பயன்பாடு அதிகரிப்பு தொழிலாளர் நலத்துறை ஆய்வு தேவை

ADDED : ஏப் 26, 2024 01:11 AM
தேனி : மாவட்டத்தில் ரோட்டோர சிறு வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகளில் எடைக்கற்களுக்கு பதிலாக கற்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலர் குடும்பத்துடன் உள்ளூர், வெளியூர் சுற்றுலா செல்ல தயாராகி வருகின்றனர். சுற்றுலா உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது பலர் ரோட்டோர கடைகளில் பழங்கள், பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். பல இடங்களில் 50 கிராம், 100 கிராம் எடை கற்களுக்கு பதிலாக கற்களை எடை அளவாக பயன்படுத்தி அளவீடு செய்கின்றனர். நுகர்வோர் குறைந்த எடையில் வாங்கி ஏமாறும் நிலை ஏற்படுகிறது. நலத்துறை அதிகாரிகள் முத்திரை இடாத தராசுகள், எடை கற்களுக்கு பதிலாக கற்கள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தராசுகளின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.