/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
/
பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : மே 15, 2024 08:38 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் 2023 டிசம்பரில் மழை பெய்தது. கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது.
தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக மே 19ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக அணை நீர்ப்பிடிப்பில் கடந்த மூன்று தினங்களாக மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 3.4 மி.மீ., பெரியாறில் 10.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் 100 கன அடியாக இருந்த நீர்வரத்து 516 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 115.30 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1781 மில்லியன் கன அடியாகும்.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.