/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை
/
வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை
வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை
வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு; பொதுப்பணித்துறை எச்சரிக்கை
ADDED : மே 19, 2024 11:50 PM

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் மழையால் வராகநதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் பொதுப் பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் பகுதியில் பெய்யும் மழையால் வராகநதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இம்மாதம் துவக்கத்தில் கோடை வெயிலால் வராகநதியில் தண்ணீர் குறைந்திருந்தது. மே 10 முதல் பெரியகுளம் பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வராக நதியில் தண்ணீர் வரத்து அதிகளவில் செல்வதால் வராகநதியில் யாரும் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ இறங்கக்கூடாது எனவும், வராகநதி செல்லும் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பொதுப் பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.