/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குரங்கணியில் கனமழை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
/
குரங்கணியில் கனமழை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 31, 2024 05:45 AM

போடி : போடி, குரங்கணி, கொட்டகுடி, கேரளா பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, அணைப்பிள்ளையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் போடி, குரங்கணி கொட்டகுடி, கேரளா பகுதியில் தொடர் மழை பெய்தது. இந்நிலையில் போடி, சிலமலை, ராசிங்காபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்ய துவங்கிய கனமழை விடிய விடிய பெய்தது. நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மழை பெய்தது.
கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பங்காருசாமி நாயக்கர் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர் வரத்து வந்த நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை பகுதியில் தடுப்பணையை தாண்டி வெள்ளியை உருக்கி விட்டார் போல நீர் பெருக்கெடுத்து அருவியாய் கொட்டி விடுகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.