/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு ஏற்றுமதி குறைவால் விலை வீழ்ச்சி
/
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு ஏற்றுமதி குறைவால் விலை வீழ்ச்சி
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு ஏற்றுமதி குறைவால் விலை வீழ்ச்சி
வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு ஏற்றுமதி குறைவால் விலை வீழ்ச்சி
ADDED : ஆக 25, 2024 05:13 AM
ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டி பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் ஏற்பட்ட விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை, தருமத்தம்பட்டி, மூணாண்டிபட்டி, குண்டலபட்டி, அணைக்கரைப்பட்டி, வெள்ளையத்தேவன்பட்டி உட்பட பல கிராமங்களில் வெண்டைக்காய் ஆண்டு முழுவதும் விளைச்சல் உள்ளது. இப்பகுதியில் விளையும் வெண்டைக்காய் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஏஜன்சி மூலம் முதல் தர காய்கள் அன்றாடம் காலையில் சேகரிக்கப்பட்டு அன்றைய தினமே விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஏற்றுமதிக்கான ஆர்டர் குறைந்துள்ளது. இந்நிலையில் வெண்டைக்காய் விளைச்சலும் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி மார்க்கெட்டில் தற்போது வெண்டைக்காய் கிலோ ரூ.10க்கும் கீழே குறைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.100 முதல் 120 வரை ஏஜன்சி மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது. ஆண்டிபட்டியில் இருந்து சென்னை, மதுரை, ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு தினமும் 5 டன் வரையும், ஏற்றுமதிக்காக 2 டன் வரையும் வெண்டைக்காய் கொண்டு செல்லப்பட்டது. வெளியூர் விற்பனை குறைந்ததால் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விலை நிர்ணயம் குறைந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. முகூர்த்த சீசன் தொடங்கினால் காய்களுக்கான தேவை அதிகமாகும் என்றனர் இவ்வாறு கூறினர்.

