ADDED : ஆக 17, 2024 01:18 AM
தேனி: மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தின விழா அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தேனி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராணி கொடி ஏற்றினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரிமுத்து, மண்டல துணை தாசில்தார் ராஜாராம், வி.ஏ.ஓ., ஜீவா, பங்கேற்றனர்.
தேனி கோட்ட தலைமை தபால் நிலையத்தில் மேற்பார்வை கண்காணிப்பாளர் குமரன் கொடி ஏற்றினார்.
தேனி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார் கொடி ஏற்றினார். உதவி மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமரேசன், நிலைய அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
தேனி தீயணைப்புத்துறை நிலையத்தில் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரக்குமார் கொடி ஏற்றினார். நிலைய அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். அல்லிநகரம் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கண்ணன் கொடி ஏற்றினார். எழுத்தர் முருகன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள், போலீசார் பங்கேற்றனர்.
தேனி லைப் பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் டி.எஸ்.பி., பார்த்திபன் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி இயக்குனர்கள் அஜய் துர்கேஸ், மேனகா, பள்ளி தாளாளர் நாரயணபிரபு, பள்ளி முதல்வர் நிலோபர் மார்பியா, ஆசிரியர்கள் ஜனனி, தேன்மொழி தனலட்சுமி, கவிதா, பிருந்தா, சோபனா, பாண்டிச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.
தேனி கம்மவார் சங்கம்பொறியியல் கல்லுாரியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
பழனிசெட்டிபட்டி : போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் கொடி ஏற்றினார். எழுத்தர் சவுந்திரபாண்டியன், எஸ்.ஐ.,க்கள் இத்ரிஸ்கான், மணிமாறன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் போலீசார் பங்கேற்றனர்.
வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., அசோக் கொடி ஏற்றினார். எழுத்தர்கள் மாரிமுத்து, செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் பங்கேற்றனர்.
வீரபாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் கீதா கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கணேசன், கிளர்க் சரவணன், ஊழியர்கள் பங்கேற்றனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் செயல் அலுவலர் மாரிமுத்து கொடி ஏற்றினார். மேலாளர் பாலசுப்பிரமணியன், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம்: மேல்மங்கலம் ஊராட்சியில் தலைவர் நாகராஜன் கொடியேற்றினார். துணைத் தலைவர் பாண்டியன், ஊராட்சி செயலர் முருகன் பங்கேற்றனர். ஜெயமங்கலம் ஊராட்சியில் தலைவர் அங்கம்மாள் கொடியேற்றினார். ஊராட்சி செயலர் கோபால் பங்கேற்றனர். . வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சின்னராஜா, ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.
லட்சுமிபுரம் ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளியில் முதல்வர் பாரதரத்னம் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ஐஸ்வர்யா, ஆசிரியர்கள், பங்கேற்றனர். கலை நிகழ்ச்சி நடந்தது.
நல்லகருப்பன் பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் கொடியேற்றினார்.
துணை முதல்வர் ஜோஷிபரம்தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்துபங்கேற்றனர்.
வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நூலகத்தில் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் தலைவர் சதக் அப்துல்லா கொடியேற்றினார். பேரூராட்சி தலைவர் நடேசன், நூலகர் திருமூர்த்தி, வாசகர்கள் பங்கேற்றனர்.
செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் எட்வின் நேசஸ் கொடியேற்றினார். துணை முதல்வர் வீரன், பொருளாளர் கில்பர்ட் ஜோசப் பங்கேற்றனர்.
டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் கார்த்திகேயன் கொடியேற்றினார். மாணவர்களுக்கு, ஆசிரியை திலகவதி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் அழகர்ராஜா நன்றி கூறினார்.
பிரசிடென்சி நர்சரி பள்ளியில் பள்ளி செயலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைவர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினார். முதல்வர் புவனேஸ்வரி பேசினார். டேவிட் துவக்க பள்ளியில் பள்ளி தாளாளர் தமிழ் செல்வி கொடியேற்றினார். தலைமையாசிரியர் ரமேஷ் பேசினார். விக்டரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைமை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர் புவனேஸ்வரி, நிதித்தலைவர் சுகுமாரன், இயக்குனர்கள் ஸ்ரீதர், ராஜேந்திரன் பங்கேற்றனர் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் தாளாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். பள்ளி நிர்வாககுழு உறுப்பினர் தேவப்ரியா பங்கேற்றார்.
பி.டி.ராஜன் நினைவு துவக்க பள்ளியில் தலைமையாசிரியர் லட்சுமணராஜா கொடியேற்றினார். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் பவானி மகேஸ்வரி பங்கேற்றனர்.
---பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் நல்லாசிரியர் சிவபாலு தேசிய கொடி ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி, டாக்டர் இளங்கோவன், பங்கேற்றனர். விழாவை ஆசிரியர் செல்லத்துரை ஒருங்கிணைத்தார்.
பெரியகுளம்: ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடிகர் மோகன்ராமன்
கொடியேற்றினார். பள்ளி ஆலோசகர் கிருஷ்ணசாமி, பள்ளி தாளாளர் மோகன் குமார், பள்ளி முதல்வர் ராஜேந்திர பிரசாத், ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற பொருளாளர் தாமோதரன் கொடியேற்றினார். கல்லூரி முதல்வர் சேசுராணி, செயலர் சாந்தாமேரி ஜோஷி, மாணவிகள் பேரவை தலைவர் மிஸ்பாசகாயராணி பங்கேற்றனர். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் கவுன்சிலர்
சரவணக்குமார் கொடியேற்றினார்.பள்ளி செயலர் ராஜா, தலைமையாசிரியர் ரவிக்குமார், ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியைகள் மகேஸ்வரி, ராதா பங்கேற்றனர்.
சேக்கிழார் நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் விஜயகுமார் கொடியேற்றினார். நிர்வாகி தாமோதரன் பங்கேற்றனர்.
பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் கிளை மேலாளர் மணிவண்ணன் கொடியேற்றினார். கண்டக்டர்கள், டிரைவர்கள் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி:: அன்னை டோரா நர்சிங் கல்லுாரியில் கல்லுாரிச் செயலர் லட்சுமணன் கொடி ஏற்றினார். முதல்வர் சுதாமகேஸ்வரி பேசினார். மாணவிகள் கலைகள் நிகழ்ச்சிகள் நடத்தினர். லட்சுமிபுரம் கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இணை இயக்குனர் கோயில்ராஜா கொடி ஏற்றினார். அலுவலர்கள், கால்நடைத்துறை டாக்டர்கள், உதவி இயக்குனர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஆண்டிப்பட்டி சண்முகசுந்தரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் தேனி ஸ்டார்ஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் கல்பனா தேவி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், உதவி தலைமை ஆசிரியர் பவுன்னம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜீவிதா, துணைத்தலைவர் பிரியா, ஆசிரியர்கள், அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
பெரியகுளத்தில் பா.ஜ., வினர் தேசியக்கொடியுடன் ஊர்வலம் சென்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் தலைமையில், நகர தலைவர் முத்துப்பாண்டி, மாநில செயலாளர் (ஐ.டி.,) வசந்த் பாலாஜி மற்றும் நிர்வாகிகள், பங்கேற்றனர். அரசு போக்குவரத்து டெப்போ அருகே துவங்கிய ஊர்வலம் சவுராஷ்டிரா சத்திரம், திருவள்ளுவர் சிலை, வடக்கு அக்ரஹாரம், மூன்றாந்தல் காந்திசிலைக்கு மாலை அணிவித்தனர்.
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சித்ரா, துணைத் தலைவர் சேகரன், பி.டி.ஓ.,ஜெயபிரகாஷ் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, தங்கப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கடமலைக்குண்டு ஹயக்ரீவா மெட்ரிக் பள்ளியில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி தாளாளர் குமரேசன், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.