/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்; கணக்கெடுக்கும் பணி துவக்கம்; -வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி

ADDED : மே 18, 2024 05:05 AM
கூடலுார் : கூடலுாரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்குப் பின் சமீபத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட சீதோசன நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தடுப்பதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுகாதாரத்துறை ஆய்வாளர் விவேக் தலைமையில் மகளிர் குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுத்தனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாம் அமைக்கவும், சித்தா பிரிவு சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.